அன்பு ஒன்றே மாறாதது
உன்னை போன்று
ஒரு தேவதையை
கண்டுபிடிக்கவே
என் வாழ்நாளில்
25 வருடங்கள் கடந்து விட்டன ..
இனியும்
என் ஆன்மா
பொருத்துக் கொள்ள போவதில்லை ..
என் இதயம்
துடிக்கிறது
ஆனால்
எனக்குள் இருந்து கொண்டு
உனக்காக துடிக்கிறது
அதற்கு நான் துரோகம் செய்ய
விரும்பவில்லை
அதன் ஆசையை
நிறைவேற்ற வேண்டும்
என நினைக்கிறது என் மனம்
கை கோர்த்து நடக்க
என் கைவிரல்கள்
உன் கை விரல்களைத்தான் தேடுகின்றது
உன் கண்களில்
இருந்து வரும்
எனை ஈர்க்கவல்ல மின்னலை
நான் காலம் முழுதும்
அனுபவித்து கொண்டே
இருக்க வேண்டும் ..
என்
தனிமையின் பசிக்கு உணவாய்
உன் மடி வேண்டும்
என் கொஞ்சல்களில் .உன் அழகு நிரம்பி வழிய வேண்டும் ..
இதுவே
நான்
உன்மீது கொண்ட அன்பு .!
Comments
Post a Comment